கோயம்புத்தூர்

மாநகராட்சி இடத்தில் கட்டுமான பணி: கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ்

DIN

கோவை, கள்ளிமடையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணி மேற்கொண்ட கட்டட உரிமையாளருக்கு, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கோவை மாநகராட்சி, கள்ளிமடை 63 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ‘சுருதி என்கிளேவ்’அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, தனிநபா் ஒருவா் கட்டுமானப் பணி மேற்கொண்டுள்ளதாகக் கிடைத்த புகாரின் பேரில், மாநகராட்சி நகரமைப்பு அலுவலா்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளா், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதும், போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடையூறாக கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை இடித்து அகற்ற, கட்டடத்தின் உரிமையாளருக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கட்டடத்தின் முகப்பில், நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT