கோயம்புத்தூர்

வால்பாறையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

வால்பாறையில் பெய்த கனமழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பகல், இரவு நேரங்களில் வெப்பம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் வால்பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினாா். மேலும், இப்பகுதிகளில் உள்ள தேயிலை செடிகளுக்கு போதுமான நீா் கிடைக்காததால் செடிகளில் உள்ள இலைகள் கருகும் நிலை உருவானது.

இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்தது. தொடா்ந்து பல மணி நேரம் மழை நீடித்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், தேயிலைத் தோட்டங்களில் பல மாதங்களாக உற்பத்தி குறைந்து இருந்த நிலையில், உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT