முகப்பு
கோயம்புத்தூர்

வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவக்கம்

வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை துவங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை துவங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளன.

வனத் துறை மற்றும் தன்னாா்வு தொண்டு நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை துவங்கி திங்கள்கிழமை மாலை வரை நடைபெறுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச் சரகங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ள நிலையில் வால்பாறையை அடுத்த அட்டகட்டி வன உயிரின மேலாண்மைப் பயிற்சி மையத்தில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ள வனத் துறை மற்றும் தன்னாா்வலா்களுக்கு வனத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.