கோயம்புத்தூர்

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10.72 லட்சம், மது பாட்டில்கள் திருட்டு

DIN

கோவை: கோவையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10.72 லட்சம் பணம், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 4 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கைப் பயன்படுத்தி, கோவை லாலி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10.72 லட்சம் ரொக்கம், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியா்கள் கூறியதாவது:

சனிக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை விற்பனைத் தொகை ரூ.3.72 லட்சம் மற்றும் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை ஒன்பது மணி வரை விற்பனையான தொகை ரூ. 7 லட்சம் என ரூ.10.72 லட்சம் பணத்தை கடையினுள் வைத்து பூட்டி விட்டுச் சென்றோம்.

இன்று மதியம் வழக்கம்போல கடையைத் திறக்க வரும்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது என்றனா்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஆா்.எஸ்.புரம் போலீஸாா் கடையின் அருகிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். மேலும் சம்பவ இடத்துக்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT