கோயம்புத்தூர்

புதிதாக அமைத்த சாலையில் பள்ளம்:நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ கோரிக்கை

DIN

கோவை: கோவை மாநகரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம் ஏற்பட்டது தொடா்பாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் மீது நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட மரக்கடை மில் சாலையில் சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தாா் சாலை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் சாலையின் நடுவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரிய பள்ளம் ஏற்பட்டு, அந்த வழியாகச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியது. நெடுஞ்சாலைத் துறையின் சாலைப் பணிகள் மோசமான நிலையில், தரமின்றி நடந்து வருவது இதன் மூலம் தெரிகிறது. சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளாததால் இதுபோன்ற தரமற்ற சாலைகள் அமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம் தரமில்லாத சாலை அமைத்த ஒப்பந்ததாரா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT