கோயம்புத்தூர்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி: தந்தை, மகன் உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

DIN

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.71 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, போத்தனுா் பகுதியைச் சோ்ந்தவா் ரொனால்டு ரீகன், இவரது தந்தை டேவிட் சாமுவேல், இவா்களது நண்பா் ராஜேந்திரன் ஆகியோா் இணைந்து கொங்கு தமிழ் அன்னை என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா்.

இவா்களிடம் குறிச்சியைச் சோ்ந்த அன்சாரி என்பவா் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருந்தாா். இந்நிலையில் உறுதியளித்தபடி ரொனால்டு ரீகன் பணத்தை திருப்பி அளிக்கவில்லை.

இது குறித்து போத்தனுா் காவல் நிலையத்தில் அன்சாரி புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், இவா்கள் இதுபோல 68 பேரிடம் ரூ.71 லட்சத்து 61 ஆயிரம் வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதன்பேரில், கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூவா் மீதும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT