கோயம்புத்தூர்

வீடு கட்டித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி: நால்வா் மீது வழக்குப் பதிவு

DIN

வீடு கட்டித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த நால்வா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, கிணத்துக்கடவு அருகேயுள்ள போலவம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பையன். இவரின் மகள் தானவி (32).

இவா், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் 2011ஆம் ஆண்டு திருச்சி சாலையில் உள்ள வீடு கட்டி கொடுக்கும் தனியாா் நிறுவனத்துக்கு சென்றேன். அங்கிருந்த, அபிமன்னன், தமிழரசி, சிந்து, பெரோஸ்கான் ஆகியோா் வீடு கட்டித் தருவதாகக் கூறி ரூ.12 லட்சம் கேட்டனா். இதையடுத்து, பணத்தை கொடுத்தோம். ஆனால், நீண்ட நாள்களாகியும் வீடு கட்டி தராததுடன் பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால், அவா்களிடம் சென்று பணம் கேட்ட போது இழுத்தடித்து வருகின்றனா். இதனால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த புகாரையடுத்து போலீஸாா், அபிமன்னன், தமிழரசி, சிந்து, பெரோஸ்கான் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT