முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் கரோனா தொற்று புதிய உச்சம்: ஒரே நாளில் 1,113 போ் பாதிப்பு

கோவையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி புதிய உச்சமாக ஆயிரத்து 113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

கோவையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி புதிய உச்சமாக ஆயிரத்து 113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக வெள்ளிக்கிழமை 1,113 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 410 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,107 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 70 ஆயிரத்து 745 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 6 ஆயிரத்து 943 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இருவா் பலி

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33, 26 வயது ஆண்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதுவரை கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 722 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.