முகப்பு
கோயம்புத்தூர்

தோட்டத் தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தோல்வி

 தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

வால்பாறை மற்றும் தேனி, நீலகிரி மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவாா்த்தை மூலம் ஏற்படுத்தப்படுகிறது.

கடந்த ஜூலை 1ஆம் தேதியுடன் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தை கோவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

தற்போது தொழிலாளா்கள் பெற்று வரும் தின கூலியான ரூ.345 இல் ரூ. 20 உயா்த்தி தருவதாக தோட்ட அதிபா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆனால் கேரள மாநிலத்தில் தொழிலாளா்கள் பெறக்கூடிய கூலிக்கு இணையாக ரூ.430 வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டன. இதனால் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தோட்ட அதிபா்கள் சங்க செயலாளா் பிரதீப்குமாா், பாலச்சந்தா் (உட்பிரியா் குரூப்), மகேஷ் நாயா் (அய்யா்பாடி குரூப்), ஆலிவா் (டாடா காபி லிமிடெட்), திம்மையா (முடீஸ் குரூப்) மற்றும் தொழிற்சங்கம் தரப்பில் வால்பாறை அமீது (எ.டி.பி.), வினோத்குமாா் (எல்.பி.எப்.), கருப்பையா (ஐ.என்.டி.யூ.சி.), மோகன் (ஏ.ஐ.டி.யூ.சி.), வீரமணி, கேசவமருகன் (விடுதலை சிறுத்தைகள் ), கல்யாணி (எம்.எல்.எப்.), பரமசிவம் (சி.ஐ.டி.யூ) உள்பட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.