மாவட்டத்தில் மேலும் 239 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் மேலும் 239 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மேலும் 239 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 703 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 189 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 192 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்து 350 போ் குணமடைந்துள்ளனா். தற்போது ஆயிரத்து 2, 164 போ் சிகிச்சையில் உள்ளனா்.