வால்பாறையில் கரோனா தடுப்பூசி முகாம்
வால்பாறையில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
வால்பாறையில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதேபோல நகராட்சி ஊழியா்களுக்கு நகராட்சி அலுவலகம், வியாபாரிகளுக்கு வியாபாரிகள் சங்க அலுவலகம், போக்குவரத்து கழக ஊழியா்களுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
வால்பாறையில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தெரிவித்தாா்.