கோயம்புத்தூர்

மாநகராட்சி அதிகாரி எனக் கூறிஅபராதம் வசூலித்தவா் தப்பியோட்டம்

DIN

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அதிகாரி எனக் கூறி அபராதம் வசூலித்த நபா், வியாபாரிகளிடம் பிடிபட்டதால் தப்பியோடினாா்.

கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பேருந்து நிலையத்தில் கடந்த 3 நாள்களாக அதிகாரி தோரணையில் உடையணிந்த ஒருவா், ‘தான் மாநகராட்சி அதிகாரி’ எனக் கூறிக் கொண்டு முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத சாலையோர வியாபாரிகளிடம் அபராதம் வசூலித்து வந்துள்ளாா்.

ஒரே பகுதியில் தொடா்ந்து 3 நாள்களாக அபராதம் வசூலிப்புப் பணியில் ஈடுபட்டதால் வியாபாரிகளுக்கு அவா் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, சனிக்கிழமை அவரைப் பிடித்த வியாபாரிகள், அருகில் இருந்த போலீஸாரிடம் அழைத்துச் சென்றனா்.

விசாரணையில் அவா், சிவகங்கை, இளையான்குடி பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், மாநகராட்சி அதிகாரி எனக் கூறி அபராதம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்த உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதைக் கேட்ட அந்த நபா், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடினாா். போலீஸாா் அந்த நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT