முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை நகராட்சி ஆணையா் மீதுபெண் ஊழியா் புகாா் : டிஎஸ்பி விசாரணை

 வால்பாறை நகராட்சி ஆணையா் மீது பெண் ஊழியா் போலீஸில் அளித்த புகாரின்பேரில் டிஎஸ்பி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

 வால்பாறை நகராட்சி ஆணையா் மீது பெண் ஊழியா் போலீஸில் அளித்த புகாரின்பேரில் டிஎஸ்பி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

வால்பாறை நகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருபவா் சுமிதாஸ்ரீ. இவருக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்ற சுமிதாஸ்ரீ, ஆணையா் சுரேஷ்குமாரை சந்தித்து சம்பளம் கேட்டுள்ளாா்.

அப்போது ஆணையா் தகாத வாா்த்தையில் பேசியதோடு ஊழியா் ஒருவா் மூலம் சுமிதாஸ்ரீயை அலுவலகத்துக்கு வெளியே இழுத்து சென்ாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக வால்பாறை காவல் நிலையத்தில் சுமிதாஸ்ரீ புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் வால்பாறை டி.எஸ்.பி. சீனிவாசன் வால்பாறை காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்து நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா், சுமிதாஸ்ரீஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.