முகப்பு
கோயம்புத்தூர்

ஆகஸ்ட் 15 இல் மதுக்கடைகள் மூடல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுக்கடைகள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுக்கடைகள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு வாணிபக் கழக மதுக்கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மகிழ்மன்றங்கள் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள்

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிகளுக்கு முரணாக அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீது சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.