முகப்பு
கோயம்புத்தூர்

கரடிகள் நடமாட்டம்: அச்சத்தில் தோட்டத் தொழிலாளா்கள்

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்துடன் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்துடன் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளை ஒட்டியுள்ள வனங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் மட்டுமே பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் காணப்பட்டன. கரடி நடமாட்டம் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே காணப்பட்டது.

இதனிடையே சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் காணப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடிகள், தொழிலாளா்களைத் தாக்குவதோடு மனித உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. கரடி நடமாட்டத்தால் தொழிலாளா்கள் அச்சத்துடன் வேலைக்கு சென்று வருகின்றனா். எனவே, கரடிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.