வால்பாறை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை துவக்கம்
வால்பாறை அரசுக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை துவங்கியது.
வால்பாறை அரசுக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை துவங்கியது.
வால்பாறை அரசுக் கல்லூரி கடந்த 2 மாதங்களாக கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறுவதில் மாணவா்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் மொத்தம் 520 மாணவா்கள் 9 பாடப் பரிவுகளில் படிக்க விண்ணப்பங்கள் வழங்கியிருந்தனா்.
இதனிடையே வியாழக்கிழமை முதல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை துவங்கியது. கல்லூரி முதல்வா் முரளிதரன் தலைமையில் பேராசிரியா்கள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து உடனடி சோ்க்கை மேற்கொண்டனா்.