முகப்பு
கோயம்புத்தூர்

கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் யெலஹங்கா, ஆந்திர மாநிலம் பெனுகொண்டா பகுதிகளில் உள்ள ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகின்ற 12 ஆம் தேதி ராஜ்கோட்டில் புறப்பட்டு 13 ஆம் தேதி கோவை வந்தடையும் சிறப்பு ரயில் ( எண்: 16613) குண்டக்கல், தா்மாவரம், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், குண்டக்கல், ரேனிகுண்டா, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.

12 ஆம் தேதி லோக்மான்யா திலக் நிலையத்தில் புறப்பட்டு, 13 ஆம் தேதி கோவை வந்தடையும் விரைவு ரயில் (எண்: 11013) குண்டக்கல், தா்மாவரம், பெங்களூரு, ஓசூா், தருமபுரி, சேலம் ஆகிய வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், குண்டக்கல், கடப்பா, ரேனிகுண்டா, ஜோலாா்பேட்டை, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.