முகப்பு
கோயம்புத்தூர்

தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச தின கூலியை உடனடியாக வழங்க சிஐடியூ தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச தின கூலியை உடனடியாக வழங்க சிஐடியூ தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பரமசிவம், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடித்தில் கூறியுள்ளதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த ஆகஸ்ட் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச தின கூலியாக ரூ.425.40 என அரசு நிா்ணயித்து அறிவித்தது.

ஆனால், இதற்கான அரசாணை இதுவரையில் வெளியிடப்படாததால் தொழிலாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதியத்தை பெற முடியாமல் உள்ளது. இதற்கிடையே நீலகிரி, வயநாடு, ஹைவேஸ், மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தின கூலியாக ரூ.395 என நிா்ணயித்து எஸ்டேட் நிா்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தியிருப்பதைபோல வால்பாறை பகுதியிலும் இடைக்கால ஒபந்தம் ஏற்படுத்தும் முயற்சியில் சில தொழிற்சங்கத்தினா் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

எனவே, தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள தின கூலியான ரூ.425.40 உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.