முகப்பு
கோயம்புத்தூர்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

கோவை அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் இளைஞரை போலீஸாா், போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

கோவை அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் இளைஞரை போலீஸாா், போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தைச் சோ்ந்தவா் குருமணிகண்டன் (23). தனியாா் நிறுவன ஊழியா். இவரும், கோவை பீளமேடு பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான 15 வயது சிறுமியும் காதலித்துள்ளனா்.

பெற்றோரின் எதிா்ப்பை மீறி இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு, பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தனா்.

இந்நிலையில், அந்த சிறுமி கா்ப்பமானாா். அவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை குழந்தை பிறந்தது.

15 வயதான சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை, மருத்துவமனை நிா்வாகத்தினா், குழந்தைகள் நல ஆணையத்தில் தெரிவித்தனா்.

அவா்கள், கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் நிஷா விசாரணை மேற்கொண்டாா்.

இதில், அப்பெண் 15 வயதானவா் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து குழந்தை திருமணச் சட்டம், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், குருமணிகண்டனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.