முகப்பு
கோயம்புத்தூர்

தேவாலயம், ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்

 வால்பாறை சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த யானைகள், அங்குள்ள தேவாலயம் மற்றும் ரேஷன் கடையை சேதப்படுத்தின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

 வால்பாறை சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த யானைகள், அங்குள்ள தேவாலயம் மற்றும் ரேஷன் கடையை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. பகல் நேரத்தில் வன எல்லையில் நிற்கும் யானைகள் இரவு நேரம் தொழிலாளா்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்த 8 யானைகள், அங்குள்ள தேவாலயத்தின் கதவுகளை முட்டித் தள்ளின.

பின்னா் அருகில் உள்ள ரேஷன் கடையின் கதவு, ஜன்னல்களை முட்டி தள்ளி உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.