முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் 92 பேருக்கு கரோனா

கோவையில் புதிதாக 92 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கோவையில் புதிதாக 92 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 707 ஆக உயா்ந்துள்ளது.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,502 ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 102 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 132 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,073 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.