முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சிப் பள்ளி கட்டடம் இடிப்பு

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பழமையான மாநகராட்சிப் பள்ளி கட்டடம் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பழமையான மாநகராட்சிப் பள்ளி கட்டடம் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறைக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் பலியாகினா்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 2,065 பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் கட்டடங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்தக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை ஒப்பணக்கார வீதி அருகே உள்ள கே.ஜி.வீதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில், 1950 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டடம் உள்ளது. தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டடத்தை வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.