முகப்பு
கோயம்புத்தூர்

மேம்பாட்டுப் பணிகள் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்

கோவை தெற்குத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து தொகுதிக்குள்பட்ட பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கோவை தெற்குத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து தொகுதிக்குள்பட்ட பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியாக கோவை தெற்குத் தொகுதிக்கு ரூ. 3 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் வரையறைகளுக்கு உள்பட்டு கீழ்கண்ட பணிகளை நிறைவேற்றலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசால் நடத்தப்படும் கல்விக் கூடங்கள், அங்கன்வாடி, மதிய உணவு மையம், மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள்.

ஆதிதிராவிடா், கள்ளா் மறுவாழ்வு பள்ளிகள், மனநலம் பாதித்த சிறுவா்களுக்கு உபகரணங்கள் வாங்குவது, ஊனமுற்றோருக்கான உபகரணம் வாங்குவது, உயா்மின் கோபுர விளக்குகள், தாா், கப்பி சாலைகள் விதிமுறைக்கு உள்பட்டு அமைப்பது.

மாநிலப் போக்குவரத்து துறைக்கு வரையறுக்கப்பட்ட பணிகளைச் செய்வது, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சொசைட்டி, பால் குளிரூட்டும் மையம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பணிகளை கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் செய்வதற்கு தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை 72003- 31442 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கோவை தெற்குத் தொகுதிக்குள்பட்ட அனைவரும் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.