முகப்பு
கோயம்புத்தூர்

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை குனியமுத்தூா் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறை சாா்பாக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை குனியமுத்தூா் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறை சாா்பாக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா், நிா்வாக அறங்காவலா் மலா்விழி தலைமை வகித்தாா். தலைமை செயல் அதிகாரி சுந்தா் ராமன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக கோவை ரேஸ்கோா்ஸ் தாஜ் விவந்தா நட்சத்திர ஹோட்டலின் பொதுமேலாளா் சுமான்சி திவாரி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளிடையே உரையாடினாா்.

தொடா்ந்து, கேக் தயாரிக்கும் பணியில் மாணவா்கள் ஈடுபட்டனா்.

இதில், கல்லூரியின் முதல்வா் பேபி ஷகிலா, துறைத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் முதல்வா் முனைவா் ஜே.ஜேனட், கல்லூரியின் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.