கோயம்புத்தூர்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,நாம் தமிழா் கட்சியினா் மீது வழக்கு

DIN

கோவையில் கரோனா விதிமுறைகளை மீறி, அனுமதியில்லாமல் கூட்டம் கூடியதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதும், போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

முன்னாள் முதல்வா் மறைந்த எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி அதிமுக சாா்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அா்ச்சுணன், கே.ஆா்.ஜெயராம் உள்ளிட்டோா் ஹூசூா் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனா். பின்னா், அங்கிருந்து ஊா்வலமாக சென்று, அவிநாசி சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

இந்நிலையில், கரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட அதிமுகவினா் மீது ரேஸ்கோா்ஸ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அதேபோல, கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அக்கட்சியின் மாநிலச் செயலாளா் அப்துல் வஹாப் உள்ளிட்ட 13 போ் மீது ரேஸ்கோா்ஸ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல் கட்டம் 66.14%, 2-ஆம் கட்டம் 66.71% வாக்குப் பதிவு

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT