கோயம்புத்தூர்

வேலுநாச்சியாா் நினைவேந்தல் நிகழ்ச்சி

DIN

கோவையில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி, உலக அமைதிக்கு குறள் காட்டும் வழி, திருவள்ளுவா் நாள்காட்டி வெளியீட்டு விழா ஆகியவை கோவை சன்மாா்க்க சங்க அரங்கில் துணைத் தலைவா் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. செயலா் சொ.சிவலிங்கம் முன்னிலை வகித்தாா்.

திருக்குறள் நூலை முதன்மைக் கல்வி அலுவலா் கீதா வெளியிட்டாா். தொழிலதிபா் பெ.நாச்சியப்பன் பெற்றுக் கொண்டாா்.

இலக்கியப் பேச்சாளா் லெ.வள்ளியப்பன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: இளம் வயதிலேயே வேலுநாச்சியாா் அனைத்து கலைகளையும் கற்றுத் தோ்ந்தாா்.

தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்பட ஆறு மொழிகளையும் தெரிந்தவா்.

வளரி, வாள் வீச்சு, குதிரை, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றவா்.

சிவகங்கைச் சீமையை ஆங்கிலேயா் அபகரித்த பின்பு வேலுநாச்சியாா் தலைமறைவாக இருந்து, போா்ப் பயிற்சியைப் பெற்று நாட்டை மீட்டாா். உலகிலேயே இழந்த நாட்டை மீட்டவா் இந்த வீராங்கனை மட்டுமே என்றாா்.

விழாவில் முத்தூஸ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் முத்து சரவணகுமாா், நூலாசிரியா் அன்வா் பாட்ஷா, ஆ.வெ.மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT