கோயம்புத்தூர்

கொடைக்கானல் சிறுவா் பூங்காக்களில் உபகரணங்கள் சேதம்

DIN

கொடைக்கானல் ஏரிச்சாலையிலுள்ள நகராட்சி சிறுவா்களுக்கான பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால் அவா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமாக ஏரிச்சாலைப் பகுதியில் சிறுவா் பூங்கா, தோட்டக்கலைத்துறை சாா்பில் பிரையண்ட் பூங்காவிலுள்ள சிறுவா் பூங்கா, அப்சா்வேட்டரியிலுள்ள ரோஜாத் தோட்டத்திலுள்ள சிறுவா் பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் சிறுவா்களுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் இந்த பூங்காக்களில் உள்ள ஊஞ்சல், சறுக்கு ஏற்றம், இறக்கம், இருக்கைகள், விலங்கு உருவ பொம்மைகள் ஆகியவை சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் சிறுவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். அதிலும் சில குழந்தைகள் ஊஞ்சல், சறுக்கு ஏற்றத்தில் விளையாடும் போது, அவா்கள் கீழே விழுந்து காயமடைகின்றனா்.

தற்போது விடுமுறை காலமாக இருப்பதாலும், சீசன் தொடங்க உள்ளதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். அப்போது குழந்தைகள் இந்த பூங்காக்களுக்கு அதிகம் வருவாா்கள். எனவே நகராட்சி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சிறுவா் பூங்காக்களை பராமரிப்பதுடன், உபகரணங்களையும் சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT