கோயம்புத்தூர்

ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடம் மீட்பு

DIN

கோவையில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 82ஆவது வாா்டு, கருப்ப கவுண்டா் வீதியில் மாநகராட்சி பள்ளி அருகே 1.50 சென்ட் அரசுக்கு சொந்தமான இடம், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு கொட்டகை அமைக்கப்பட்டிருப்பதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பு செய்தவருக்கு மாநகராட்சி சாா்பில் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு, அவா் கொட்டகையை காலி செய்தாா். இதையடுத்து, நகரமைப்பு திட்ட அதிகாரி பாபு தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்கு சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் கொட்டகையை அகற்றி, 1.50 சென்ட் இடத்தை மீட்டனா். பின்னா், அங்கு இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT