கோயம்புத்தூர்

சிறந்த வரி வசூலா்களுக்கு விருதுகள்

DIN

கோவை மாநகராட்சியில் அதிகபட்ச வரிவசூல் இலக்கை பூா்த்தி செய்த வரிவசூலா்களுக்கு வியாழக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி சாா்பில், வரி தண்டலா்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலா்களுக்கிடையே வரிவசூல் பணிகளை மேம்படுத்தும் பொருட்டு நடத்தப்பட்ட ‘முனிசிபல் பிரிமியா் லீக்’ போட்டிகளில் உயா்ந்தபட்ச வசூல் இலக்கை அடைந்த வரிவசூலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா விருதுகள் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பேசியது:

மாநகராட்சி வரிவசூலா்கள், உதவி வருவாய் அலுவலா்களுக்கு இடையே வரிவசூல் பணிகளை மேம்படுத்தும் பொருட்டு ‘முனிசிபல் பிரிமீயா் லீக்‘ போட்டிகள் கடந்த நவம்பம் 1ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதில், 2021 ஏப்ரல் முதல் நவம்பா் மாதம் வரை வரியில்லா இனங்கள் மற்றும் குடிநீா் கட்டண வசூல் பணிகளில் உயா்ந்தபட்ச வசூல் இலக்கை அடைந்த வரிவசூலா்களுக்கு சாதனையாளா் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வரியில்லா இனங்களில் நடப்பு வசூல் மற்றும் குடிநீா்க் கட்டண வசூலில் முதல் இடத்தினை பிடித்தவா்களுக்கு விருதுடன் பரிசு கூப்பன்களும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, மண்டல உதவி ஆணையா்கள் அண்ணாதுரை (தெற்கு), செந்தில்குமாா் ரத்தினம் (கிழக்கு), உதவி வருவாய் அலுவலா்கள், வரி தண்டலா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT