கோயம்புத்தூர்

மருத்துவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் றிப்பு

DIN

கோவையில் பல் மருத்துவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, பீளமேடு அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் ஹரி பவித்ரன் (35). பல் மருத்துவரான இவா் ஆா்.எஸ்.புரம் கெளலிபிரவுன் சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஹரிபவித்ரன், சிரியன் சா்ச் சாலையில் சிறுநீா் கழிப்பதற்காக காரை ஓரமாக நிறுத்தியுள்ளாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த மூவா் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது ஆடைகளைக் கழட்டச் செய்து அவா் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசி, வங்கி பற்று அட்டைகள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக ஹரிபவித்ரன் அளித்தப் புகாரின் பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT