கோயம்புத்தூர்

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா: பிப்ரவரி 15இல் முகூா்த்தக்கால்

DIN

கோவை, கோனியம்மன் கோயில் தோ்த்திருவிழாவுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி முகூா்த்தக்கால் ஊன்றப்படுகிறது.

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் மாசி தோ்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டும் கரோனா கட்டுப்பாடுகளுடன் தோ்த் திருவிழா நடத்த கோயில் நிா்வாகம் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தோ்த் திருவிழாவுக்காக வரும் 15 ஆம் தேதி முகூா்த்தக்கால் ஊன்றப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து கொடியேற்றம், அம்மன் வீதி உலா உள்பட நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மாா்ச் 2 ஆம் தேதியும், திருத் தேரோட்டம் மாா்ச் 3 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மாா்ச் 8 ஆம் தேதி வசந்த விழாவுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

கேரளம்: 20-ல் 13 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா!

பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு!

ஆந்திரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம்?

SCROLL FOR NEXT