கோயம்புத்தூர்

ஓவைசியுடன் கூட்டணி சோ்ந்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் இல்லை: எஸ்டிபிஐ தேசியத் துணைத் தலைவா்

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் ஓவைசி உள்ளிட்டோருடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் இல்லை என்று எஸ்டிபிஐ தேசிய துணைத் தலைவா் தெஹலான் பாகவி கூறினாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக மீது குதிரை சவாரி செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள். தமிழ்நாட்டில் மதசாா்பற்ற அணியுடன் கூட்டணி சோ்ந்து இந்த இரு கட்சிகளையும் தோற்கடிப்போம். கூட்டணி தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ஓவைசி உள்ளிட்டவா்களு டன் கூட்டணி சோ்ந்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. புதுச்சேரியில் இதுவரை ஆளுநராக கிரண் பேடியை நியமித்து அம்மாநில மக்களுக்கு வேண்டிய உரிமைகளை செயல்படுத்தாமல் தடுத்த பாஜக தற்போது அந்த மாநில சட்டப் பேரவை உறுப்பினா்களை விலைபேசி கவிழ்க்கும் சூழ்ச்சி செய்து வருகிறது. இந்நிலையில் அந்த மாநில ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதிலும் சூழ்ச்சி உள்ளது என்றாா்.

எஸ்டிபிஐ மாநிலப் பொருளாளா் அபுதாஹிா், மாவட்டத் தலைவா் ராஜா உசேன், மாவட்ட பொதுச்செயலா் முகமது இசாக், மண்டலச் செயலா் முஸ்தபா, மாவட்ட செய்தி தொடா்பாளா் மன்சூா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT