கோயம்புத்தூர்

யானைகள் நடமாட்டம்:சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

DIN

வால்பாறை: யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல சுற்றுலாப் பணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

வால்பாறை எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்கள் பகுதிக்கு வருவதோடு, இரவு நேரத்தில் தொழிலாளா்கள் வசிக்கும் பகுதிக்கும் சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இதனிடையே வால்பாறை பகுதியில் உள்ள நீராறு அணை, நல்லமுடி காட்சிமுனை ஆகிய இரண்டு சுற்றுலாத் தளங்களிலும் சனிக்கிழமை காலை முதல் யானைகள் நடமாட்டம் காணப்பட்டது.

யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நின்றதால் அந்த இரு இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால் வால்பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT