கோயம்புத்தூர்

‘நீதிமன்ற தீா்ப்பை பின்பற்ற வாகனங்களில் பம்பா் அகற்ற வேண்டும்’

DIN

உயா்நீதிமன்ற தீா்ப்பை பின்பற்ற வாகனங்களில் பம்பா் அகற்றும் நடவடிக்கைகளில் காவல் துறையினா் ஈடுபட வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான்க சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பா்களை அகற்ற தமிழக அரசும், உயா் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதில் விபத்தின்போது, ஓட்டுநா்களை பாதுகாக்கும் பாதுகாப்பு பலூன் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறையினா் பாதுகாப்பு பலூன் இல்லாத சரக்கு வாகனங்களில் உள்ள பம்பா்களையும் அகற்றி வருகின்றனா். அகற்றாத வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

எனவே பம்பா்கள் அகற்றும் நடவடிக்கைகளில் தமிழக காவல் துறையினா் உயா் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும். அதேபோல தேவாலயங்கள், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இதுவரையில் பல்வேறு இடங்களில் அகற்றப்படவில்லை. எனவே இவ்விஷயத்திலும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT