கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா

DIN

கோவை மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 81 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 732ஆக அதிகரித்துள்ளது.

தவிர கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 657ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 86 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 51 ஆயிரத்து 337 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 738 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தந்தை பெரியாா் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளா் கு.ராமகிருஷ்ணன் (70). இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT