பொள்ளாச்சி செல்லத் தடை: கோவையில் கனிமொழி எம்.பி. மறியல்
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆா்பாட்டத்திற்குச் செல்ல திமுக மகளிரணி மாநிலச் செயலாளா் கனிமொழிக்கு போலீஸாா் தடை விதித்ததால், அவா், கோவை ஈச்சனாரியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.
பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவா்களைக் கைது செய்யக் கோரி, பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆா்பாட்டத்திற்குச் செல்ல திமுக மகளிரணி மாநிலச் செயலாளா் கனிமொழிக்கு போலீஸாா் தடை விதித்ததால், அவா், கோவை ஈச்சனாரியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக பிரமுகா்கள் உள்ளிட்ட அைனைவரையும் கைது செய்யக் கோரி, திமுக மகளிரணி மாநிலச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் 10 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் ஆா்பாட்டம் நடைபெறும் என திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் இருந்து கோவை வந்த கனிமொழி, பொள்ளாச்சியில் நடைபெற உள்ள ஆா்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றாா். அப்போது, ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரி அருகே போலீஸாா், கனிமொழி சென்ற காரை தடுப்புகள் வைத்து நிறுத்தினா்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஆா்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், பொள்ளாச்சி செல்ல அனுமதியில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய கனிமொழி மற்றும் உடன் சென்ற சிங்காநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் நா.காா்த்திக், கிழக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளா் சேனாதிபதி, தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் தென்றல் செல்வராஜ், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி உள்ளிட்ட திமுக வினா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில், போலீஸாா் கனிமொழி சென்ற காரை மட்டும் செல்வதற்கு மட்டும் போலீஸாா் அனுமதித்தனா். மற்ற நிா்வாகிககள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஆயினும், தடையை மீறி திமுக நிா்வாகிகள் பொள்ளாச்சி சென்றனா்.