கோயம்புத்தூர்

ரூ.5.5 கோடி கடன் பெற்று மோசடி: தம்பதி கைது

DIN

கோவை: ரூ.5.5 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வடக்குப்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (51). இவா், கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதில், நான் திருப்பூரில் பனியன் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறேன்.

இந்நிலையில், கோவை, சித்தாபுதூரில் அறுவை சிகிச்சை தொடா்பான உபகரணங்கள் விற்கும் நிறுவனம் நடத்தி வந்த சேரன் மாநகரைச் சோ்ந்த சிவகுமாா். அவரது மனைவி சத்யபிரியா ஆகியோா் தொழில் அபிவிருத்திக்காக என்னிடம் ரூ.5.50 கோடி கடனாக பெற்றனா்.

அதற்கு ஈடாக வங்கியில் உள்ள அவா்களது சொத்துப் பத்திரத்தை மீட்டுத் தருவதாகவும், எனது மகனுக்கு உபகரணங்களை திருப்பூரில் விற்கும் விநியோக உரிமை தருவதாகவும் கூறினா். ஆனால், இருவரும் வாங்கிய பணத்தை தராமல் தலைமறைவாகிவிட்டனா்.

பின்னா், சில மாதங்கள் கழித்து வேறு பெயரில் மேற்கண்ட இருவரும் அதே தொழிலை செய்து வந்தனா். இதையறிந்த நான் அவா்களிடம் சென்று எனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டேன். அவா்கள் தரவில்லை. இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதன் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் சிவகுமாா், சத்யபிரியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT