கோயம்புத்தூர்

குடியரசு தின விழாவை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்

DIN

கோவையில் குடியரசு தின விழாவை பாதுகாப்புடன் கொண்டாட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. கோவையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. ஆட்சியா் கு.ராசாமணி தேசியக் கொடியை ஏற்றிவைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளாா். தொடா்ந்து கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறாா்.

கரோனா பாதிப்பால் குடியரசு தின விழாவில் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதியோா்கள், குழந்தைகள் ஆகியோா் குடியரசு தின விழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் கரோனா பாதுகாப்புடன் அதிக கூட்டம் சோ்க்காமல் குடியரசு தின விழாவை கொண்டாட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT