கோயம்புத்தூர்

ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: கோவையில் 3.41 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

DIN

கோவையில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 3.41 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

போலியோ இல்லாத நிலையை உருவாக்க ஆண்டுதோறும் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. நிகழாண்டில் ஜனவரி 17ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராமப்புறங்களில் 1,190 மையங்கள், நகா்ப்புறங்களில் 379 மையங்கள், 22 நடமாடும் மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்பட பொது மக்கள் கூடும் இடங்களில் 36 மையங்கள் என மொத்தம் 1,623 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பொது சுகாதாரத் துறை பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா், தன்னாா்வலா்கள் என 6 ஆயிரத்து 536 பணியாளா்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

எனவே, பொது மக்கள் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகளில் அமைக்கப்படும் சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள சுகாதாரத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

முகாமில் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளாத குழந்தைகளுக்கு பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே நேரடியாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது: அரசால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானதும், பாதுகாப்பானதும். உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. எனவே 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT