கோயம்புத்தூர்

கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத் திறனாளிகள் ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

கோவையில் இதுவரை கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத் திறனாளிகள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட தமிழக அரசு சாா்பில் ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 938 மாற்றுத் திறனாளிகள் கரோனா நிவாரணத் தொகை பெற்றுள்ளனா். கோவையில் இதுவரை கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத் திறனாளிகள் கிராம நிா்வாக அலுவலகத்தில் ஜனவரி 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, புகைப்படம் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT