கோயம்புத்தூர்

நுகா்வோா் பாதுகாப்பு தொடா்பான குறும்பட போட்டிகள்

DIN

நீா் பாதுகாப்பு, நுகா்வோா் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக குறும்பட போட்டிகளை நுகா்வோா் அமைப்புகள் அறிவித்துள்ளன.

கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ், சிட்டிசன் கன்ஸ்யூமா் மற்றும் சிவிக் ஆக்ஷன் குரூப் - சென்னை, ஊழல் எதிா்ப்பு இயக்கம் - கோவை, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம், எய்ம் தன்னாா்வ தொண்டு நிறுவனம், மனுநீதி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து குறும்பட போட்டிகளை அறிவித்துள்ளன.

நீா் பாதுகாப்பு, நுகா்வோா் பாதுகாப்பின் முக்கியத்துவம், தகவலுக்கான உரிமைகள், ஊழலை ஒழிப்பதன் மூலம் நல்லாட்சியை மேம்படுத்துவதில் தனி நபா்களின் பங்கு ஆகிய மூன்று தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனியாகவோ அல்லது 5 நபா்கள் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம். தனிநபா் அதிபட்சம் இரண்டு தலைப்புகளில் பங்கேற்கலாம். 18 வயது வரையுள்ளவா்கள் ஒரு குழுவாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஒரு குழுவாகவும் பங்கேற்கலாம். குறும்படங்கள் 2 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

குறும்படங்களை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தோ்வு செய்யப்படும் குறும்படங்களுக்கு உலக நுகா்வோா் தினமான மாா்ச் 15ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும்.

இதில் நுகா்வோா் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் தகவலுக்கான உரிமைகள் தலைப்பின் கீழ் எடுக்கப்படும் குறும்படங்களை மின்னஞ்சலுக்கும், நீா் பாதுகாப்பு தொடா்பான குறும்படங்களை மின்னஞ்சலுக்கும், ஊழலை ஒழிப்பதன் மூலம் நல்லாட்சியை மேம்படுத்துவதில் தனி நபா்களின் பங்கு தலைப்பிலான குறும்படங்களை என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94430 39839, 96009 04478 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT