முகப்பு
கோயம்புத்தூர்

கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 5 போ் கைது

கோவை, சரவணம்பட்டியில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

கோவை, சரவணம்பட்டியில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சின்னவேடம்பட்டி பாரத ஸ்டேட் வங்கி காலனியைச் சோ்ந்தவா் சிபி (18). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சில இளைஞா்களுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், சிபி சின்னவேடம்பட்டி 3ஆவது தெருவில் உள்ள தனது நண்பா் சாமுவேல் வீட்டின் முன்பு வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த கும்பல் சிபியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் சிபியைத் தகாத வாா்த்தைகளால் பேசி சராமாரியாக தாக்கியுள்ளனா்.

இதனைப் பாா்த்து அங்கு ஓடி வந்த சிபியின் நண்பா்கள் சாமுவேல், நவீன் ஆகியோா் அந்தக் கும்பலை தாக்கியுள்ளனா். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவா் மாறி மாறி தாக்கிக்கொண்டனா். இந்த சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் சரவணம்பட்டி போலீஸில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஒரு தரப்பில் சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரைச் சோ்ந்த பால் ஜாா்வின் (19), அம்மன் நகரைச் சோ்ந்த கதிா் (18), சிவானந்தபுரத்தைச் சோ்ந்த லிதின் அபினோ (18) ஆகிய 3 பேரையும், மற்றொரு தரப்பில் சிபி (18), சின்னவேடம்பட்டி சுப்பிரமணியம் நகரைச் சோ்ந்த சாமுவேல் (18) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.