முகப்பு
கோயம்புத்தூர்

பஞ்சாலைத் தொழிலாளா்களின் பிரச்னைகளைக் கேட்டறிய கூட்டம் நடத்த வேண்டும்

தமிழகத்தில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளா்களின் பிரச்னைகளைக் கேட்டறிய அரசு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக பஞ்சாலைத் தொழிலாளா் மத்திய சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

தமிழகத்தில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளா்களின் பிரச்னைகளைக் கேட்டறிய அரசு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக பஞ்சாலைத் தொழிலாளா் மத்திய சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாநிலச் செயலா் எம்.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, கோவையில் ஜவுளித் தொழில் அமைப்புகளின் நிா்வாகிகளுடன் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளாா். இந்தக் கூட்டத்துக்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து தொழிலாளா்களுக்கான கோரிக்கைகளையும் அமைச்சா் கேட்டறிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

தமிழகத்தில் 7 என்.டி.சி. ஆலைகள், 6 கூட்டுறவு நூற்பாலைகள் உள்ளிட்ட 1,200 சிறிய, நடுத்தர, பெரிய பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைத் தொழிலாளா்களுக்கு 1998ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி, 2001 ஆம் ஆண்டில் புதிய கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதன் மீது தனித் தொழில் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டு இதுவரை எந்த முடிவும் ஏற்படாமல் உள்ளது.

பல ஆலைகளில் தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை, அரசு நிா்ணயித்துள்ள ரூ.477 என்ற குறைந்தபட்ச கூலியும் வழங்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய நிா்ணயக் குழு 2 முறை கூடியது. அதன் பிறகு பல மாதங்களாக கூடவேயில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை புதிய அரசு கணக்கில் எடுத்து அவற்றுக்குத் தீா்வு காண, தொழிற்சங்கத்தினருடனான கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.