வால்பாறையில் தடுப்பூசி முகாம்
வால்பாறையில் 8 நாள்களுக்குப் பின் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் மக்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
வால்பாறையில் 8 நாள்களுக்குப் பின் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் மக்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
வால்பாறையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை முகாம் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக பொதுமக்கள் அதிகாலை 5 மணி முதலே வரிசையில் நிற்கத் துவங்கினா். மதியம் வரை கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில் வந்தவா்களில் பலா் ஊசி இல்லாததால் திரும்பிச் சென்றனா்.
வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி தடுப்பூசி மையத்திற்கு சென்று அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி வரவழைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினாா்.
கூட்டுறவு நகர வங்கித் தலைவா் வால்பாறை அமீது, துணைத் தலைவா் மயில்கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.