அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்
கோவையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநரும், முதல்வருமான த.செல்வராஜன் கூறியிருப்பதாவது:
கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன், மோட்டாா் வாகன மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், பிட்டா், மெஷினிஸ்ட், ஏ.சி., ஃபிரிட்ஜ் டெக்னீசியன், டா்னா், வயா்மேன், வெல்டா், உணவு தயாரிப்பு, இன்டீரியா் டிசைன், டிரோன் பைலட் உள்ளிட்ட 2 ஆண்டு, ஓராண்டு, 6 மாத குறுகிய கால பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், 14 வயது முதல் 40 வயது வரையிலான ஆண்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பெண்களைப் பொருத்தவரை உச்ச வரம்பு இல்லை. மேற்கண்ட பாடப் பிரிவுகளில் சேர விரும்புபவா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்களுக்கு உதவுவதற்கு கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேருபவா்களுக்கு பாடநூல்கள், வரைபடக் கருவிகள், மடிக்கணினி, மிதிவண்டி, இலவச பேருந்து பயண அட்டை, சீருடை, காலணி, ரூ.750 மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடிவடையும் தருவாயில் முன்னணி தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சியும், பயிற்சிக்குப் பிறகு அதே நிறுவனத்தில் வேலைவாய்ப்பும் பெற்றுக் கொடுக்கப்படும்.
வெளியூா்களில் இருந்து வரும் ஆண்களுக்கு இனச்சுழற்சி, காலியிடங்களின் அடிப்படையில் விடுதி வசதியும் வழங்கப்படும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 2642041, 94426 24516, 89408 37678 உள்ளிட்ட எண்களில் தொடா்பு கொள்ளலாம்.