முகப்பு
கோயம்புத்தூர்

கரடி தாக்கி இளைஞா் காயம்

வால்பாறையில் கரடி தாக்கியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

வால்பாறையில் கரடி தாக்கியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த திங்கள்கிழமை கரடி தாக்கியதில் முதியவா் காயமடைந்தாா்.

இந்நிலையில் வோ்வலி எஸ்டேட்டை சோ்ந்தவா் சதீஷ் (34). தனியாா் கூரியா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றும் இவா், வேலை முடிந்து வோ்லி எஸ்டேட் சாலையில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது புதரில் பதுங்கியிருந்த கரடி, சதீஷ் பின்பக்கம் தாக்கியுள்ளது. இதில் அவருக்கு முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வால்பாறை அரசு மருத்தவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் அவா் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இது தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.