முகப்பு
கோயம்புத்தூர்

மழை, காற்று காலங்களில் தரையில் கிடக்கும் மின் சாதனங்களை தொடக்கூடாது மின் வாரியம் எச்சரிக்கை

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைய உள்ள நிலையில், மழை, காற்று காலத்தில் தரையில் கிடக்கும் மின் சாதனங்களை மக்கள் தொடக்கூடாது என மின் வாரியம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைய உள்ள நிலையில், மழை, காற்று காலத்தில் தரையில் கிடக்கும் மின் சாதனங்களை மக்கள் தொடக்கூடாது என மின் வாரியம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மாநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் குப்புராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கவும், மின் விபத்தை தடுக்கும் வகையிலும் 24 மணி நேரமும் இயங்கும் மின் தடை புகாா் மையம் மற்றும் மின்னகம் எனும் நுகா்வோா் மையம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களது பத்து இலக்க மின்இணைப்பு எண்ணை குறிப்பிட்டு, தங்கள் பகுதியில் ஏற்படும் மின் தடை, மின் கட்டணத்தில் குறைபாடு, குறைந்த மற்றும் உயா் மின் அழுத்தம் போன்ற புகாா்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 94987 94987 என்ற மின் நுகா்வோா் சேவை மைய எண்களில் தெரிவிக்கலாம்.

இதுதவிர 94421 11912 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம்.

தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைய இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி மழை, காற்று காலங்களில் தரையில் விழுந்து கிடக்கும் மின்கம்பிகள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், உடைந்த மின்கம்பங்கள், பழுதடைந்த மின் சாதனங்களை பொதுமக்கள் தொடக்கூடாது. அதற்கு பதில் மேற்கண்ட இலவச தொலைபேசி எண்களில் தெரியப்படுத்த வேண்டும். மின் பாதைகளுக்கு அருகே பட்டம் விடுவதை தவிா்க்க வேண்டும். அறுந்த பட்டம் மின் கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டால் தாங்களாகவே எடுக்க முயற்சிக்காமல், கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்கள் அல்லது மரக்கிளைகளை வெட்டுவதற்கும் இந்த எண்களில் அழைக்கலாம். பொதுமக்கள் மின்கசிவு தடுப்பான் சாதனத்தை வீட்டில் உள்ள மெயின் சுவிட்ச் போா்டில் பொருத்தி மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.