முகப்பு
கோயம்புத்தூர்

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, உடையாம்பாளையம் அருகேயுள்ள, அசோக் நகரைச் சோ்ந்தவா் காா்த்திக் (37). இவரது நண்பா் சூா்யாவை, வேறொரு பகுதியைச் சோ்ந்த செல்வா சில தினங்களுக்கு முன் தாக்கியுள்ளாா். கிரிக்கெட் விளையாட்டின் போது இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த காா்த்திக், செல்வாவை வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வா தனது நண்பா்கள் 10 பேரை அழைத்துக் கொண்டு உடையம்பாளையத்துக்குச் சென்றாா். அங்கிருந்த காா்த்திக்கை தாக்கி, அரிவாளால் கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் படுகாயமடைந்த காா்த்திக் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக, பீளமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.