கிளன் பிலிப்ஸ் மிகவும் அற்புதமான வீரர்; ஜோஸ் பட்லர் புகழாரம்!
கிளன் பிலிப்ஸ் மிகவும் அற்புதமான வீரர் என அவருக்கு ஜோஸ் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கிளன் பிலிப்ஸ் மிகவும் அற்புதமான வீரர் என அவருக்கு ஜோஸ் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.
29 வயதாகும் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான கிளன் பிலிப்ஸ் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 26 ரன்கள் எடுத்தார்.
அதன் பின், கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அவர் இணைந்தார். சன்ரைசர்ஸ் அணியில் 5 போட்டிகளில் விளையாடிய பிலிப்ஸ், 39 ரன்கள் எடுத்தார்.
Advertisement
Advertisement
கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கிளன் பிலிப்ஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இருப்பினும், காயம் காரணமாக அந்த சீசனில் அவர் விளையாடவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக கிளன் பிலிப்ஸை அணியில் தக்கவைத்தது.
இந்த நிலையில், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தும் கிளன் பிலிப்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர் என அவருக்கு ஜோஸ் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிளன் பிலிப்ஸ் மிகவும் அற்புதமான வீரர். அவர் டி20 கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங், பந்துவீச்சு, அபார ஃபீல்டிங் என பல திறமைகள் அவரிடம் உள்ளது. உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர்களில் அவரும் ஒருவர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் இருப்பது பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு பல தெரிவுகளை கொடுத்துள்ளது. அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மிகவும் சிறப்பாக விளையாடுவார்.
ஐபிஎல் தொடர் மிக நீண்ட தொடர். பிளேயிங் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும். அதனால், கிளன் பிலிப்ஸுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும் என்றார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் முதல் போட்டியில் வருகிற மார்ச் 31 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
Jos Buttler has praised Glenn Phillips as a fantastic player.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.