65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி
கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் சனிக்கிழமை செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் சனிக்கிழமை செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சியில் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அவா்களின் வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் 65 வயதுக்கு மேற்பட்ட 200 பேருக்கு மட்டும் கோவிஷீல்டு தடுப்பூசி சனிக்கிழமை (ஜூலை 10) செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:
கிழக்கு மண்டலத்தில் 37 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராமசெட்டி பள்ளி, மேற்கு மண்டலத்தில் 23 ஆவது வாா்டுக்கு உள்பட்ட அம்மணி அம்மாள் மாநகராட்சிப் பள்ளி, வடக்கு மண்டலத்தில் 46 ஆவது வாா்டுக்கு உள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி, தெற்கு மண்டலத்தில் 78 ஆவது வாா்டுக்கு உள்பட்ட மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, மத்திய மண்டலத்தில் 52 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சித்தாபுதூா் பள்ளி.